தமிழகத்தில் 3,665 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு


தமிழகத்தில் 3,665 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு
x

காவல்துறை பணிக்கு காத்திருப்பவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர் பதவிகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு காவல்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், 10-ம் வகுப்பு முடித்து காவல்துறை பணிக்கு காத்திருப்பவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 2,833 இரண்டாம் நிலை காவலர்கள், 180 சிறைக்காவலர்கள், 631 தீ அணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18,200 - 67,100/- வழங்கப்படும்.

தேர்வர்கள் நாளை முதல் வரும் செப்.21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு வரும் நவம்பர் மாதம் 09 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

1 More update

Next Story