உளவுத்துறையில் வேலை பார்க்க ஆசையா? அருமையான வாய்ப்பு


உளவுத்துறையில் வேலை பார்க்க ஆசையா? அருமையான வாய்ப்பு
x

18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை,

உளவுத்துறையில் காலியாக உள்ள 455 பாதுகாப்பு உதவியாளர் (மோட்டார் டிரான்ஸ்போர்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்; சென்னை 11, பெங்களூர் 06, ஐதராபாத் 07, டெல்லி 127, என மொத்தம் காலியாக 455 பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு முடித்து இருப்பது அவசியம். இலகு ரக வாகன ஓட்ட உரிமம் வைத்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை: 2 கட்ட தேர்வுகள் நடைபெறும். டையர் 1 மற்றும் டையர் 2 (டிரைவிங் டெஸ்ட் - நேர்முகத்தேர்வு)

விண்ணப்ப கட்டணம்: ரூ.650 கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 28.09.2025 ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/1/9201385680.pdf

1 More update

Next Story