ஜனாதிபதியிடம் 16-வது நிதி ஆணையத்தின் அறிக்கை தாக்கல்


ஜனாதிபதியிடம் 16-வது நிதி ஆணையத்தின் அறிக்கை தாக்கல்
x

16-வது நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்தார்,

புதுடெல்லி,

2026-27 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய வரிகள் மற்றும் மானியங்களில் மாநிலங்களின் பங்கிற்கான சூத்திரத்தை தீர்மானிக்க 16-வது நிதி ஆணையம் கடமைப்பட்டது. அக்டோபர் 31-ந்தேதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருந்த இந்த ஆணையத்திற்கு நவம்பர் 30-ந்தேதி வரை ஒரு மாதம் நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 16-வது நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்தார், இதுகுறித்து ஜனாதிபதி மாளிகையான ராஷ்டிரபதி பவன் அலுவலகத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “16-வது நிதி ஆணையத்தின் உறுப்பினர்கள், அதன் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து 2026-31-ம் ஆண்டுக்கான ஆணையத்தின் அறிக்கையை சமர்ப்பித்தனர்,’’ என்று கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story