முறைகேடு புகார் எதிரொலி: கடும் சரிவை சந்தித்து வரும் அதானி பங்குகள்


முறைகேடு புகார் எதிரொலி: கடும் சரிவை சந்தித்து வரும் அதானி பங்குகள்
x
தினத்தந்தி 21 Nov 2024 10:12 AM IST (Updated: 21 Nov 2024 12:02 PM IST)
t-max-icont-min-icon

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

மும்பை,

சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், தனது தவறை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்து, அதானி தனது திட்டத்திற்காக பெரும் தொகையை திரட்டினார் என்றும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

அதானியின் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது என்று கூறி நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. கவுதம் அதானி மட்டுமின்றி அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் அதில் இடம் பெற்றுள்ளது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் அதானி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் முறைகேடு புகார் எதிரொலியாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதன்படி அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட், அதானி எனர்ஜி, அதானி பவர் நிறுவனங்களின் பங்குகள் விலை 20 சதவீதத்திற்கும் மேல் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.

1 More update

Next Story