புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டு தடை


புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டு தடை
x

பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை உருவாக்கும் ‘ரோடமைன் பி’ எனப்படும் ரசாயன பொருள் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டு தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாக கடந்த ஆண்டு எழுந்த புகார்கள் எழுந்தன.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பஞ்சு மிட்டாய்களை ஆய்வகத்தில் பரிசோதனை செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ‘ரோடமைன் பி’ எனப்படும் ரசாயன பொருள் கலக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் மற்றும் ‘ரோடமைன் பி’ கலந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும் மேலும் ஒராண்டுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி முகமது யாசின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1 More update

Next Story