போகி பண்டிகை: புதுச்சேரியில் நாளை விடுமுறை

நாளை விடுமுறையை ஈடுசெய்ய வரும் 31-ல் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
பொங்கல் பண்டிகையைச் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில், மாநிலத்திலுள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை (வியாழன் முதல் ஞாயிறு வரை) 4நாட்கள் தொடர் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில், போகியை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. நாளை விடுமுறையை ஈடுசெய்ய வரும் 31-ல் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் மூலம் போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் எனத் தமிழர் திருநாளை அரசு அலுவலர்கள், மாணவ-மாணவியர் என உற்சாகமாகக் கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது.






