இருதரப்பு உச்சி மாநாடு; ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு


இருதரப்பு உச்சி மாநாடு; ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
x

இந்தியா வந்தடைந்த ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் இருவருக்கும் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் டெல்லி கடமை பாதையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க, 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் இந்தியா வந்தடைந்தனர்.

அவர்கள் இருவருக்கும் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவர்களை மத்திய இணை மந்திரி ஜிதின் பிரசாத வரவேற்றார்.

அவர்களை மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் இருவரையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் தலைமை விருந்தினர்களாக அவர்கள் பங்கேற்பது என்பது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பிரதமர் மோடியுடனான அவர்களின் சந்திப்பு, இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் புதிய அத்தியாயம் ஒன்றை முன்னறிவிக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளரான ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று கூறும்போது, இந்திய-ஐரோப்பிய ஒன்றிய நட்புறவானது நம்பிக்கை மற்றும் நம்பகதன்மை வாய்ந்த ஒன்றாக இருக்கும் என குறிப்பிட்டார்.

1 More update

Next Story