கொல்கத்தாவில் தீ விபத்து: 30 குடிசைகள் எரிந்து நாசம் - ஒருவர் பலி


கொல்கத்தாவில் தீ விபத்து: 30 குடிசைகள் எரிந்து நாசம் - ஒருவர் பலி
x

இந்த தீ விபத்தால் அப்பகுதியை சேர்ந்த 200 பொதுமக்கள் வீடற்றவர்களாகினர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள நர்கெல்டங்கா நகரின் ஒரு பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் தீ ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தீயானது கிடுகிடுவென பரவத்தொடங்கியது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 17 தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீயானது முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 30 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. இதில் மொல்லா (65) என்பவர் தீயில் எரிந்து உயிரிழந்தார். எரிந்து போன குடிசைகளை அகற்றி மீட்புப் பணியினர் உடலை மீட்டு பிரேத பிரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தீ விபத்தால் அப்பகுதியை சேர்ந்த 200 பொதுமக்கள் வீடற்றவர்களாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நர்கெல்டங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story