புதிய தொழிலாளர் சட்டங்கள் தரும் உத்தரவாதங்கள் - பட்டியலிட்ட மன்சுக் மாண்டவியா

புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர் நலனுக்கான பிரதமர் மோடி எடுத்த முக்கிய நடவடிக்கை என மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசு சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிதாக 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை (New Labour Code) மத்திய அரசு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் பல்வேறு உத்தரவாதங்களை அளிப்பதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
மோடி அரசு ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் நியாயமான கண்ணியத்தை வழங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் இன்று புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் கீழ்கண்ட உத்தரவாதம் அளிக்கிறது. அவை;
* அனைத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய உள்ளது.
* இளைஞர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்க உத்தரவாதம் அளிக்கிறது
* பெண்களுக்கு சமஊதியம் வழங்க வழிவகை செய்கிறது.
* 40 கோடி தொழிாலளர்களுக்கு சமூக பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குகிறது
* ஒரு ஆண்டு வேலைக்கு நபிறகு ஊழியர்களுக்கு பணிக்கொடைக்கான உத்தரவாதத்தை வழங்குகிறது
* 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்குஆண்டுதோறும் உடல்நல பரிசோதனைகளை வழங்குகிறது
* ஓவர் டைம் பணியாளர்களுக்கு இரட்டை ஊதியம் வழங்க வழிவகுத்து கொடுக்கிறது
* அபாயகரமானதாக அடையாளம் காணப்பட்டுள்ள துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு 100 சதவீத சுகாதார பாதுகாப்பை வழங்குகிறது
* சர்வதேச தரத்தின்படி தொழிலாளர்களுக்கு சமூக நீதியை வழங்குவதை உறுதி செய்கிறது.
இந்த சீர்த்திருத்தங்கள் சாதாரண மாற்றங்கள் மட்டுமில்லை. தொழிலாளர் நலனுக்கான பிரதமர் மோடி எடுத்த முக்கிய நடவடிக்கையாகும். இந்த புதிய தொழிலாளர் சீர்த்திருத்தம் னெ்பத சுயசார்பு இந்தியாவை நோக்கிய பயணத்தில் முக்கிய படிநிலையாகும். 2047 ம் ஆண்டில் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய இது புதிய உத்வேகத்தை அளிக்கும்.''
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.






