கவர்னர் மூலமாக மாநில அரசுகளுக்கு தொல்லை- காங்கிரஸ் குற்றச்சாட்டு
பா.ஜனதா ஆட்சி இல்லாத மாநிலங்களில், அந்த மாநில அரசுகளுக்கு கவர்னர்களால் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், நில முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராக கவர்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கி இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி சித்தராமையா மீது என்ன காரணத்திற்காக வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றி தெரியவில்லை. அதுபற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு, பதில் அளிக்கிறேன். பொதுவாக பா.ஜனதா ஆட்சி இல்லாத மாநிலங்களில், அந்த மாநில அரசுகளுக்கு கவர்னர்களால் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக கர்நாடகம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளுக்கு கவர்னர்கள் தொல்லை கொடுப்பது அதிகமாக உள்ளது. நில முறைகேட்டில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய பா.ஜனதா தலைவர்கள் கேட்பது குறித்து, தெரிந்து கொண்டு பேசுகிறேன். இதுபற்றியெல்லாம் தெரிந்து கொண்டு பேசுவது நல்லது"இவ்வாறு அவர் கூறினார்.