24 மணிநேரத்தில் தபால் சேவை; மத்திய மந்திரி தகவல்


24 மணிநேரத்தில் தபால் சேவை; மத்திய மந்திரி தகவல்
x

அஞ்சல் துறையை லாபம் தரும் துறையாக மாற்ற திட்டமிட்டுள்ளோம் என அவர் கூறினார்

டெல்லி,

மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா. இவர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , நாடு முழுவதும் அஞ்சல் துறை மூலம் 24 மணிநேரத்தில் தபால் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நாடு முழுவதும் அஞ்சல் துறை மூலம் தபால் சேவை 24 மணிநேரத்திலும், பார்சல் சேவை 48 மணிநேரத்திலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வர உள்ளது. 2029ம் ஆண்டுக்கள் அஞ்சல் துறையை செலவுகள் நிறைந்த துறையாக இல்லாமல் லாபம் தரும் துறையாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்

என்றார்.

1 More update

Next Story