விமானம் புறப்பட தயாரானபோது தொழில்நுட்ப கோளாறு; சரியான நேரத்தில் கண்டறிந்த விமானி

விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
சண்டிகர்,
அரியானா மாநிலம் சண்டிகரில் இருந்து உத்தரபிரதேசத்தின் லக்னோவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இண்டிகோ விமானம் புறப்பட தயாரானது.
விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். புறப்படுவதற்க்கு முன் விமானத்தை விமானி ஆய்வு செய்தார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். சரியான நேரத்தில் அவர் கோளாறை கண்டறிந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், மாற்று விமானம் மூலம் அனைவரும் லக்னோ புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story