5ம் தேதி ஜிப்மர் புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு


5ம் தேதி ஜிப்மர் புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு
x

"குருநானக் ஜெயந்தியை" முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

குருநானக் ஜெயந்தி அன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

"குருநானக் ஜெயந்தியை" முன்னிட்டு வருகிற 5-ந்தேதி ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும், அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story