வெளிநாடு செல்வதில் சிக்கல்; கெஜ்ரிவால் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோர்ட்டு அனுமதி


வெளிநாடு செல்வதில் சிக்கல்; கெஜ்ரிவால் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 7 Aug 2025 8:01 PM IST (Updated: 7 Aug 2025 8:06 PM IST)
t-max-icont-min-icon

நிபந்தனையுடன் கெஜ்ரிவாலின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

சுல்தான்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தின் கவுரிகஞ்ச், முசாபிர்கானா பகுதிகளில் கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நடந்த பிரசார கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சுல்தான்பூர் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவர் தற்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் ஜாமீனில் உள்ளார்.

இந்த வழக்கு காரணமாக கெஜ்ரிவால் வெளிநாடு செல்வதில் உள்ள சிரமங்களை காரணம் காட்டி காலாவதியான தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அனுமதிக்க கோரி சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, எந்தவொரு வெளிநாட்டு பயணத்துக்கு முன்பு கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கெஜ்ரிவாலின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அனுமதி வழங்கியது.

1 More update

Next Story