கொல்கத்தா: ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - 14 பேர் பரிதாப பலி


கொல்கத்தா: ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - 14 பேர் பரிதாப பலி
x
தினத்தந்தி 30 April 2025 8:35 AM IST (Updated: 30 April 2025 11:33 AM IST)
t-max-icont-min-icon

கட்டிடத்தின் 4 வது மாடியில் சிக்கியவர்கள் ஏணியின் மூலம் வெளியேற முயற்சி செய்தனர்.

கொல்கத்தா,

மத்திய கொல்கத்தாவின் பால்பட்டி மச்சுவா அருகே ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு 8.15 மணயளவில் தீ ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பலரும் வேகமாக வெளியேற தொடங்கினர். கட்டிடத்தின் 4 வது மாடியில் சிக்கியவர்கள் ஏணியின் மூலம் வெளியேற முயற்சி செய்தனர். இதனால் சிலர் காயமடைந்தனர்.

இந்த தீயானது மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் ஓட்டலில் பலரும் சிக்கி தவித்தனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சில மணி நேர போராட்டங்களுக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து ஓட்டலுக்குள் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தீயில் கருகிய நிலையில் 14 பேரின் உடலை அதிகாரிகள் மீட்டனர். உயிரிழந்த 14 பேரில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story