22-ந்தேதி சந்திக்கிறார்கள் லடாக் போராட்ட குழுவினர், மத்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

லடாக்கை தனி மாநிலமாக அங்கரீக்க கோரி, கார்கில் ஜனநாயக கூட்டணி, லே அபெக்ஸ் பாடி போன்ற 2 அமைப்புகள் போராட்டத்தை நடத்தியது.
லே,
லடாக்கை தனி மாநிலமாக அங்கீகரிக்க வேண்டும், தங்கள் தாய்மொழியை அரசியலமைப்பின் அட்டவணையில் இணைக்கவும் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தியது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். இதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
கார்கில் ஜனநாயக கூட்டணி, லே அபெக்ஸ் பாடி போன்ற 2 அமைப்புகள் இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தன. தொடர்ந்து அங்கு பதற்ற நிலை நீடித்து வருகிறது.
இதையடுத்து பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர உள்துறையை சேர்ந்த மத்திய குழுவினர், போராடட குழுவினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இந்த அழைப்பை இரு போராட்ட அமைப்புகளும் ஏற்று பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர். இரு அமைப்புகளின் 3 பிரதிநிதிகள், லடாக் எம்.பி. முகமது ஹனீபா ஜான் உள்ளிட்டோர் மத்திய குழுவினரை 22-ந் தேதி சிந்திக்க உள்ளனர்.
Related Tags :
Next Story






