சிறுமிக்கு காதல் தொல்லை: வாலிபர் கைது

சிறுமி நடந்து செல்லும் போது வாலிபர் பின்னால் சென்று காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சிறுமிக்கு காதல் தொல்லை: வாலிபர் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்தநிலையில், அதேபகுதியை சேர்ந்த மனுப் (வயது 27) என்பவர் சிறுமியை பின்தொடர்ந்து வந்துள்ளார். சிறுமி அப்பகுதியில் நடந்து செல்லும் போது பின்னால் சென்று மனுப் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பேலூர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மனுப்பை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com