நடுவானில் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக டெல்லிக்கு ஒரு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.
நடுவானில் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்
Published on

புதுடெல்லி,

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா வழியாக டெல்லிக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது நடுவானில், அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானம் மங்கோலியா தலைநகர் உலான்பாடருக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் எந்த விதமான கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய பொறியாளர்கள் குழுவினர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com