பீகாரில் ஆட்சியை தக்க வைத்த தேசிய ஜனநாயக கூட்டணி

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு 6ம் தேதியும், 2ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு 11ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் , பிற கட்சிகள் இடம்பெற்றன. இந்தியா கூடணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், பிற கட்சிகள் இடம்பெற்றன.
இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாய கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பிற கட்சிகள், சுயேட்சைகள் 6 தொகுதிகளை கைப்பற்றின.
தேர்தலில் தேசிய கூட்டணி வெற்றிபெற்றதை தொடர்ந்து விரைவில் நிதீஷ் குமார் பீகார் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்க உள்ளார்.






