‘வகுப்புவாத அரசியல் தொடங்கப்பட்ட அயோத்தியில் எங்கள் மக்கள் அதை முடித்துவிட்டனர்’ - அகிலேஷ் யாதவ்

அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டது என அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார்.
‘வகுப்புவாத அரசியல் தொடங்கப்பட்ட அயோத்தியில் எங்கள் மக்கள் அதை முடித்துவிட்டனர்’ - அகிலேஷ் யாதவ்
Published on

புதுடெல்லி,

நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு குறித்து இன்று நாடாளுமன்ற மக்களவையில் சிறப்பு விவாதம் தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இன்றைய விவாதத்தின்போது மக்களவை எம்.பி.யும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் பேசியதாவது;-

சமாஜ்வாடி கட்சி எம்.பி. அவதேஷ் பிரசாத், அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மக்களவை தொகுதியில் பா.ஜ.க.வை தோற்கடித்தார். எங்கள் வெற்றி வகுப்புவாத அரசியல் வேலை செய்யாது என்பதை உறுதி செய்தது. வகுப்புவாத அரசியலை பா.ஜ.க. எங்கு தொடங்கியதோ, அதே அயோத்தியில் எங்கள் உத்தர பிரதேச மக்கள் அதை முடித்துவிட்டனர்.

தேசியவாதம் பற்றி இப்போது சத்தமாகப் பேசும் சிலர், சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆங்கிலேயர்களுக்கு தகவல் அளிப்பவர்களாகச் செயல்பட்டனர். சுதந்திர இயக்கத்தில் பங்கேற்காதவர்களுக்கு, வந்தே மாதரத்தின் பெருமையைப் பற்றி என்ன தெரியும்?

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com