குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கண்டித்த பெற்றோர்: நர்சிங் மாணவி தற்கொலை


குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கண்டித்த பெற்றோர்: நர்சிங் மாணவி தற்கொலை
x

செமஸ்டர் தேர்வில் மாணவி குறைந்த மதிப்பெண் எடுத்ததால், பெற்றோர் கண்டித்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் அய்யனார். ஆட்டோர் டிரைவர். இவரது மனைவி குமுதவள்ளி. இவர்களது மகள் திவிஷ்யா (20 வயது). இவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் திவிஷ்யா குறைந்த மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனம் உடைந்த அவர் கடந்த 7-ந்தேதி வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திவிஷ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

1 More update

Next Story