தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் திருத்தம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு


தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில்  சிறப்பு வாக்காளர் திருத்தம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 9 Sept 2025 1:30 AM IST (Updated: 9 Sept 2025 1:31 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், உண்மையான வாக்காளர்களை கண்டறிவது நேர்மையான தேர்தல் நடைபெற வழிவகுக்கும் எனவும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளும் அட்டவணையை முன்கூட்டியே அறிவிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரியும் அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்‌ஷி அமர்வு நேற்று விசாரித்தது, இதுதொடர்பாக பதில் அளிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டனர்.

1 More update

Next Story