மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி; 59 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்


மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி; 59 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்
x
தினத்தந்தி 14 Dec 2025 7:59 AM IST (Updated: 14 Dec 2025 11:57 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதி வாய்ந்த ஒரு வாக்காளர் நீக்கப்பட்டால் கூட தர்ணா போராட்டம் நடத்தப்படும் என மம்தா பானர்ஜி கூறினார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது. அங்கு நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை தொகுதி வாரியாக தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது. இதில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் பவானிப்பூர் தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பட்டியல்படி 1,61,509 வாக்காளர்கள் இருந்த நிலையில், 44,787 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.

இது எதிர்க்கட்சித்தலைவரான சுவேந்து அதிகாரியின் தொகுதியில் நீக்கப்பட்டதை விட 4 மடங்கு அதிகம் ஆகும். அதிகாரியின் தொகுதியில் 2,78,212 வாக்காளர்களில் 10,599 பேர் மட்டுமே நீக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் சவுரிங்கீ தொகுதியில் அதிகபட்சமாக 74,553 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். அடுத்ததாக கொல்கத்தா துறைமுகம் தொகுதியில் 63,730 வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பின்னர் வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதி வாய்ந்த ஒரு வாக்காளர் நீக்கப்பட்டால் கூட தர்ணா போராட்டம் நடத்தப்படும் என மம்தா பானர்ஜி 2 நாட்களுக்கு முன்பு கூறினார். இந்நிலையில், இந்த பெயர் நீக்க நடவடிக்கை நடந்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் போலி வாக்காளர்கள் , வேறு இடங்களுக்கு நிரந்தர குடியேற்றம், மரணம் அடைந்தவர்கள் என பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பலர் நீக்கப்பட்டு உள்ளனர்.

இதன்படி, மொத்தத்தில் மேற்கு வங்காளத்தில் 59 லட்சம் பெயர்களை பட்டியலில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. சில இடங்களில் பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் 15 வருட வயது இடைவெளியே உள்ளது. இந்த எண்ணிக்கை 12 லட்சம் என்ற அளவில் உள்ளது என்றும் இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரிகள் தீவிர கவனத்தில் கொண்டுள்ளனர்.

1 More update

Next Story