காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்

சங்கமத்தில் நீராடியது குறித்து தமிழக பிரதிநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வாரணாசி,
இந்தியாவின் 2 வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார மற்றும் கல்வி மையங்களான வாரணாசி - தமிழ்நாடு இடையேயான பழங்கால தொடர்புகளை புதுப்பிக்கவும், மீண்டும் உறுதிப்படுத்தவும், கொண்டாடவும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 3-வது ஆண்டாக நடத்தப்படும் இந்த நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் குழுவை மகா கும்பமேளா மற்றும் மாவட்ட நிர்வாகம் வரவேற்றது. தென்னிந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் நேற்று கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜூக்கு சென்று திரிவேணி சங்கமத்தில் நீராடினார்கள். பின்னர் அவர்கள், அயோத்தியில் ஸ்ரீராமர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சங்கமத்தில் நீராடியது குறித்து தமிழக பிரதிநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் மகத்தான தொலைநோக்குப் பார்வைக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அதனை முன்னெடுத்துச் செல்லும் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானையும் பாராட்டினர்.






