அசைவ உணவு சாப்பிட்ட 2 ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் - திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை

ஆந்திர பிரதேச அறநிலைய சட்டத்தின் கீழ் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள அலிபிரி பகுதியில், தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 2 ஊழியர்கள் அசைவ உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து தேவஸ்தான நிர்வாகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அலிபிரி அருகே அசைவ உணவு உட்கொண்டதற்காக ராமசாமி மற்றும் சரசம்மா ஆகிய 2 ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர்கள் இருவர் மீது ஆந்திர பிரதேச அறநிலைய சட்டம் பிரிவு 114-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






