இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 6 Jun 2025 1:26 PM IST
காஷ்மீர் - உலகிலேயே உயரமான செனாப் ரயில் பாலம் திறப்பு
செனாப் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ஆற்றுப் படுகையிலிருந்து 359மீ உயரத்தில் அமைந்துள்ள செனாப் ரயில் பாலம்
ஈபிள் கோபுரத்தை விட 35மீ அதிக உயரம் கொண்ட செனாப் ரயில் பாலம்
கத்ரா-ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் துவக்கி வைத்தார் பிரதமர்
- 6 Jun 2025 1:25 PM IST
பாமகவில் இருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி கூறியுள்ளார். ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஜிகே மணி கூறியுள்ளார்.
- 6 Jun 2025 1:05 PM IST
மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பாக போட்டியிடும் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த நிகழ்வின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- 6 Jun 2025 12:47 PM IST
நீட் முதுநிலை தேர்வு-ஆக.3ம் தேதி நடத்த அனுமதி
நீட் முதுநிலை தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
நீட் முதுநிலை தேர்வை இரு ஷிப்டுகளாக நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்வை ஒரே ஷிப்டில் நடத்துவதற்கு உத்தரவு
நிர்வாக காரணங்களை சுட்டிக்காட்டி, ஆகஸ்ட் 3ம் தேதி நடத்தும் வகையில் நீட் முதுநிலை தேர்வை தள்ளி வைக்க அனுமதி கோரி மனுதாக்கல்
“2.5 லட்சம் பேர் நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் எழுத வேண்டியுள்ளதால் 500 தேர்வு மையங்கள் தேவை
ஏற்பாடுகளை செய்ய கால அவகாசம் தேவை“
- தேசிய தேர்வுகள் வாரியம்
- 6 Jun 2025 10:55 AM IST
- இந்தியாவில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
- இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 498 பேர் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதி
- இந்தியா முழுவதும் கொரோனா பாதித்த 5364 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன
- நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் நான்கு பேர் உயிரிழப்பு
- தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு, 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
- 6 Jun 2025 10:21 AM IST
ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. ரெப்போ வட்டி வகிதம் குறைக்கப்பட்ட நிலையில், வீடு மற்றும் வாகனங்களுக்கன கடன்கள் குறைய வாய்ப்பு உள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக ரெப்போ வட்டி விகிதம் குறையும்.







