இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025


LIVE
இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025
x
தினத்தந்தி 14 April 2025 9:33 AM IST (Updated: 16 April 2025 8:42 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 14 April 2025 4:26 PM IST

    சென்னை பரங்கிமலை பகுதியில் அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வு போலீசார் மேற்கொண்ட சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான 2 கிலோ கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

  • 14 April 2025 3:52 PM IST

    குஜராத்தில் பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் இந்திய கடலோர காவல் படை இணைந்து கடந்த 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்களில் சர்வதேச கடல் எல்லை கோட்டு பகுதியில் சோதனையில் ஈடுபட்டது.

    இதில், 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும்.

  • 14 April 2025 2:40 PM IST

    சென்னை அணியில் கெய்க்வாட்டுக்கு பதிலாக, 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

  • 14 April 2025 1:06 PM IST

    • சென்னை சாலிகிராமத்தில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவர் படுகாயம்.
    • முகம் மற்றும் மணிக்கட்டில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பத் தனியார் மருத்துவமனையில் அனுமதி.
    • விசாரணையில் 16 வயது சிறுவன் பைக்கை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது
    • சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை

  • 14 April 2025 12:43 PM IST

    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

  • 14 April 2025 10:47 AM IST

    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழாவையொட்டி தைலாபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாமக தலைவர் ராமதாஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

  • 14 April 2025 10:45 AM IST

    அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழாவையொட்டி சேலத்தில் உள்ள அவரது சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  • 14 April 2025 9:59 AM IST

     அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சுக்கு எதிராக வழக்குப் பதிய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட கோரி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்

  • 14 April 2025 9:53 AM IST

    அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை

1 More update

Next Story