இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 Feb 2025 10:51 AM IST
ராணிப்பேட்டையில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் அதிகாலை நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது என தகவல் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை என அவர் கூறியுள்ளார். நான் நலமுடன் இருக்கிறேன். படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று நடிகர் யோகி பாபு கூறியுள்ளார்.
- 16 Feb 2025 10:27 AM IST
தி.மு.க.வில் சமீபத்தில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவுக்கு, கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தி.மு.க.வின் கட்சி தலைமை அறிவித்து உள்ளது.
- 16 Feb 2025 10:19 AM IST
சென்னை பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய பெண் காவலரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த சத்யபாலு என்பவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
- 16 Feb 2025 9:29 AM IST
தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..." என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 16 Feb 2025 9:26 AM IST
புதுடெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என இந்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.
இதேபோன்று, படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 16 Feb 2025 9:18 AM IST
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் நடந்த 3-வது காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசும்போது, தென்காசியில், சிவகாசியில் என்று தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருந்திருக்கிறது. உலகில் பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் திருக்குறளை பெருமைப்படுத்தி வருகிறார்.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் உலகெங்கும் திருவள்ளுவருக்கு கலாசார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கலாசார மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று பேசியுள்ளார்.







