இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025
x
தினத்தந்தி 27 April 2025 10:34 AM IST (Updated: 27 April 2025 8:30 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 27 April 2025 11:14 AM IST

    பஹல்காம் தாக்குதலால் ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேதனை

    ஜம்மு காஷ்மீர் வேகமாக வளர்ச்சியடைவதை நமது எதிரிகள் விரும்பவில்லை- பிரதமர் மோடி பேச்சு

  • 27 April 2025 10:51 AM IST

    போலி உயில் மூலம் இருட்டுக் கடையை தனது சகோதரர் நயன் சிங் அபகரிக்க முயற்சி;நெல்லை இருட்டுக் கடையை உரிமை கோரி நயன்சிங் வெளியிட்ட பொது அறிவிப்பிற்கு கவிதா தரப்பில் மறுப்பு அறிக்கை வெளியீடு

  • 27 April 2025 10:49 AM IST

    சேப்பாக்கத்தில் ஏப்.30ல் நடைபெறவுள்ள சிஎஸ்கே - பஞ்சாப் ஐபிஎல் போட்டிக்கு டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவங்கியது

  • 27 April 2025 10:36 AM IST

    பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தொடங்கியுள்ளது. இதையடுத்து, எல்லையில் பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடியை அளித்து வருகிறது. எல்லையில் போர் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது. 

1 More update

Next Story