விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

இந்த விழாவில் 2572 இளங்கலை பட்டதாரிகள், 503 முதுகலை பட்டதாரிகள், மற்றும் 18 முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டன.
விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
Published on

விஐடி போபால் பல்கலைக்கழகம் தனது 6வது ஆண்டு பட்டமளிப்பு விழாவை அக்டோபர் 4, 2025 சனிக்கிழமை நடத்தியது, இதில் 2572 இளங்கலை பட்டதாரிகள், 503 முதுகலை பட்டதாரிகள், மற்றும் 18 முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டன. விஐடி போபாலின் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் அவர்கள் விழாவுக்கு தலைமை தாங்கி உறுதிமொழியை நிர்வகித்தார்.

டாக்டர் சச்சிதானந்த ஜோஷி, இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (IGNCA)-ன் உறுப்பினர் மற்றும் செயலாளர், முக்கிய விருந்தினராக விழாவை அலங்கரித்தார். அவரது உரையில், கல்வியில் கலாச்சாரம் மற்றும் அறிவியலின் ஆழமான இணைப்பை அவர் முக்கியப்படுத்தினார்.

நவீன அறிவியல் மனித முன்னேற்றத்திற்கான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கும் அதே வேளையில், மதிப்புகள், அடையாளம் மற்றும் அவற்றின் பயன்பாட்டை வழிநடத்தும் நெறிமுறை கட்டமைப்பை வடிவமைப்பது கலாச்சாரம் என்பதை அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பழைய குருகுல முறையை நினைவுகூர்ந்த அவர், நமது பாரம்பரியத்தில் கல்வி ஒரு முழுமையான அணுகுமுறையாக இருந்தது என்றும் - அதில் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை உள்ளடக்கியது, அறிவியல், கலைகள், மற்றும் தத்துவம் மூலம், தர்மம் மற்றும் ஆசிரியர் மீதான மரியாதையில் வேரூன்றி கற்பிக்கப்பட்டது என்றும் வலியுறுத்தினார். இந்திய தத்துவம், யோகா, தியானம் மற்றும் பாரம்பரிய கலைகள் அறிவாற்றலைக் கூர்மைப்படுத்தும், மீள்தன்மையை வளர்க்கும் மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் காலத்தால் அழியாத துறைகள் என்றும், அகிம்சை, உண்மை மற்றும் பற்றின்மை போன்ற மதிப்புகள் சமூகத்திற்கு தார்மீக நங்கூரங்களாக இருக்கின்றன என்றும் டாக்டர் ஜோஷி விரிவாகக் கூறினார். மகாராஷ்டிராவின் பக்தி மரபுகள் முதல் கேரளாவின் தற்காப்புக் கலைகள் மற்றும் வடகிழக்கின் நெசவு பாரம்பரியம் வரை இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையிலிருந்து வளமாகப் பெறுவது, கலாச்சார வேர்கள் பன்முகத்தன்மையில் ஒற்றுமையை வலுப்படுத்துகின்றன மற்றும் அடையாளத்தில் பெருமையை வளர்க்கின்றன என்பதை அவர் வலியுறுத்தினார். பாரம்பரியம் என்பது ஒரு வரம்பு அல்ல, மாறாக வலிமையின் நங்கூரம், ஞானம், இரக்கம் மற்றும் நம்பிக்கை இவை மூன்றும் எதிர்காலத்தில் உயரப் பறக்க செய்யும் என்று டாக்டர் ஜோஷி குறிப்பிட்டார்.

பட்டமளிப்பு விழாவில் ஊக்கமளிக்கும் பேச்சாளர் மாளவிகா ஜோஷி, விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், விஐடி போபால் அறங்காவலர் ரமணி பாலசுந்தரம், விஐடி போபாலின் உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ். விசுவநாதன், துணை வேந்தர் டி.பி. ஸ்ரீதரன், செயல் பதிவாளர் கே.கே. நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஸ்குவாட்ஸ்டேக்கின் (SquadStack) இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வ் அகர்வால் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்களை உருவாக்குவதில் சிறந்த அனுபவமுள்ள ஒரு திறமையான தொழில்முனைவோரான அகர்வால், இளம் பட்டதாரிகளை தங்கள் தொழில்முறை பயணங்களில் புதுமை, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோரை ஏற்றுக்கொள்ள ஊக்குவித்தார்.

விஐடி போபாலின் உதவித் துணைத் தலைவரான காதம்பரி எஸ். விசுவநாதன்அவர்கள் தனது உரையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 90 சதவீதம் மாணவர்கள் சிறப்பான வேலை வாய்ப்புகளை பெற்றதை குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டில் பொருளாதாரச் சவால்களை மீறி 87சதவீதம் வேலை வாய்ப்புகள் பெற்றதை பெருமையுடன் அறிவித்தார். ஆண்டு சம்பளம் ரூபாய் 50 லட்சத்துடன் நான்கு மாணவர்கள் ஆப்பிள், மைக்ரோசாப்ட், சோமேட்டோ (Apple, Microsoft, Zomato) போன்ற நிறுவனங்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை பெற்றனர், மேலும் 60 சதவீதம் மாணவர்கள் ட்ரீம் மற்றும் சூப்பர் ட்ரீம் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். பல்கலைக்கழகம் கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச வேலை வாய்ப்புகளைப் உறுதிப்படுத்தி வருகிறது. இது உலக அளவில் தடம் பதித்திருப்பதை அறிவித்தார் .

விஐடி போபாலின் ஸ்டார்ஸ் திட்டம் பற்றி காதம்பரி எஸ். விசுவநாதன் பேசினார், இது மத்திய பிரதேச அரசுப் பள்ளிகளில் இருந்து மாவட்ட அளவில் முதன்மை இடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி மற்றும் இலவச உறைவிடத்தை வழங்குகிறது. இந்த முயற்சியின் கீழ், கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த 74 மாணவிகள் மற்றும் 60 மாணவர்கள் வேலைவாய்ப்புகளில் சிறந்து விளங்கியுள்ளனர், 2024 ஆம் ஆண்டில் ஒரு பட்டதாரி மைக்ரோசாப்ட் வழங்கும் ஆண்டிற்கு ரூ.51 லட்ச வேலை வாய்ப்பை பெற்றுள்ளார். பலர் AMD, Shell, Amazon மற்றும் JSW போன்ற நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் வெற்றியானது இம்மாதிரியான வேலை வாய்ப்புகளின் மூலம் கிராமப்புற மாணவர்களின் திறனை மேம்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com