‘சர்வதேச வர்த்தக சவால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு


‘சர்வதேச வர்த்தக சவால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி மிகவும் பாராட்டத்தக்கது என திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (EEPC) அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

“கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதி இலக்குகள் கணிசமாக மாறிவிட்டன. இந்த மாற்ற செயல்முறையை EEPC தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

நமது நாட்டில் கிடைக்கும் தனித்துவமான திறன்களை பயன்படுத்தி, சர்வதேச வர்த்தகத்தில் உள்ள சவால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும். இந்தியாவில் குறைந்த விலையில் உயர்தர பொறியியல் சேவைகளும், தயாரிப்புகளும் கிடைப்பது நமது பலமாகும். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதி 70-ல் இருந்து 115 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத் துறையில் ஏற்பட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில், ஏற்றுமதியில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி மிகவும் பாராட்டத்தக்கது. உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச பொருளாதார சூழலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, EEPC அமைப்பின் பங்கு மிகவும் முக்கியமானதாகிவிட்டது. சர்வதேச வர்த்தகத்தில் உள்ள சவால்களை வாய்ப்புகளாக நாம் மாற்ற வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story