இளம்பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - கொல்கத்தாவில் பயங்கரம்

இளம்பெண்ணுக்கு மதுபானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்து, கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர்.
இளம்பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - கொல்கத்தாவில் பயங்கரம்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கிழக்கு பெருநகர புறவழிச்சாலை அருகே உள்ள பேருந்து நிலையத்தில் 28 வயது இளம்பெண் ஒருவர் நேற்று இரவு 9 மணியளவில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கார் வந்தது. அந்த காரில் பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான நபர் ஒருவர் இருந்துள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் 3 பேர் அந்த காரில் இருந்துள்ளனர்.

அவர்கள் அந்த பெண்ணை பலவந்தமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அந்த பெண்ணுக்கு மதுபானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்து, கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர். பின்னர் 3 பேரும் அந்த பெண்ணை காரில் வைத்தே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மைதான் பகுதியில் காரை நிறுத்தி அந்த பெண்ணை இறக்கிவிட்டு அவர்கள் மூவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த பெண்ணை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com