பெரும்பிடுகு முத்தரையரின் வாழ்க்கையைப் பற்றி இளைஞர்கள் படிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பெரும்பிடுகு முத்தரையரின் அசாதாரண வாழ்க்கையைப் பற்றி இளைஞர்கள் படிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
புதுடெல்லி,
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை (சுவரன் மாறன்) கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையும், முன்னுணரும் திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையைப் பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






