டிக்கெட் பரிசோதகரின் மோட்டார் சைக்கிள் திருட்டு


டிக்கெட் பரிசோதகரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மூலக்குளம்

புதுச்சேரி முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் அமிர்தவேலு (வயது 58). இவர் அரசு சாலை போக்குவரத்து கழக அலுவலகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை 100 அடி ரோட்டில் நிறுத்திவிட்டு பணிக்கு சென்று விட்டார். பின்னர் பணி முடிந்து இரவு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.. மர்மநபர் யாரோ அதனை திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் அமிர்தவேலு அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.


Next Story