மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 19 Sept 2024 12:18 PM IST (Updated: 19 Sept 2024 12:24 PM IST)
t-max-icont-min-icon

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின்சாரச் சட்டம் 2003-ன் சட்டப் பிரிவுகளின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாணையத்தில் 16.08.2024 முதல் தலைவர் பதவி காலியிடம் ஏற்பட்டுள்ளது.

இந்த பதவியினை நிரப்புவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.டி.செல்வம் தலைமையில் அரசு தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட தேர்வுக் குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. தேர்வுக் குழுவின் முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவியினை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் 16.09.2024 அன்று மாலை 6.00 மணி வரை வரவேற்கப்பட்டது.

இந்நிலையில், தேர்வுக்குழுவின் முடிவிற்கிணங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால வரம்பினை 04.10.2024 மாலை 6.00 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த விவரங்கள் இணையதள முகவரி https://www.tn.gov.in/department/7ல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story