இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு தேதி மாற்றம்


இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு தேதி  மாற்றம்
x
தினத்தந்தி 11 Jun 2024 11:44 AM GMT (Updated: 11 Jun 2024 12:23 PM GMT)

ஜூன் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் போட்டித் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story
  • chat