ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு


ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2024 4:30 PM IST (Updated: 12 Aug 2024 4:38 PM IST)
t-max-icont-min-icon

ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து ஜாபர் சாதிக்கை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அதன்படி சிறை மாற்று வாரண்ட் மூலமாக திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை வருகிற 23-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story