பொறியியல், தொழில்நுட்ப படிப்பில் இத்தனை பிரிவுகளா? மாணவர்களே இந்த லிஸ்ட பாருங்க..!


Engineering and Technology Courses
x
தினத்தந்தி 10 Jun 2024 7:18 AM GMT (Updated: 19 Jun 2024 6:57 AM GMT)

பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பொறியியல் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.

இந்தியா முழுவதும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் புகழ் பெற்ற பொறியியல் கல்வி நிறுவனங்களோடு ஒப்பிட்டு, போட்டிபோடும் அளவுக்கு இந்திய பொறியியல் கல்லூரிகளின் தரம் உயர்ந்துள்ளது. அவற்றை அடையாளம் கண்டு அந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பொறியியல் படிப்பை தொடர்வது நல்லது.

விதவிதமான பொறியியல் படிப்புகள் பல்வேறு வடிவங்களில் நடத்தப்படுகின்றன. பட்டப்படிப்புகளாகவும், டிப்ளமோ படிப்புகளாகவும், சான்றிதழ் படிப்புகளாகவும் இந்தப் படிப்புகள் வகைப்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பலவித கல்வி நிறுவனங்களும் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐ.டி.ஐ. எனப்படும் இன்டஸ்ட்டிரியல் டிரைனிங் இன்ஸ்டிட்டியூட் என பலநிலைகளில் கல்வி அமைப்புகள் இயங்குகின்றன.

இதனால், எந்தக் கல்லூரியில் சேர்ந்து படிப்பது? எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது? என்று இளைய உள்ளங்களும், பெற்றோர்களும் முடிவெடுக்க இயலாத நிலை உருவாகிவிடுகிறது. இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு உதவும் வகையில் பொறியியல் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் இங்கு தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.

பொறியியல் (Engineering) மற்றும், தொழில்நுட்ப படிப்பில் (Technology) பல்வேறு பிரிவுகள் உள்ளன. அந்த பிரிவுகள் என்னென்ன? என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களில் ஏராளமான பாடப்பிரிவுகள் உள்ளன. அவை பற்றிய விவரங்கள்:-

1. ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்(Aeronautical Engineering)

2. அக்ரிகல்சர் அன்ட் இரிகேசன் இன்ஜினியரிங் (Agriculture and Irrigation Engineering)

3. அப்பேரல் டெக்னாலஜி (Apparel Technology)

4. ஆர்க்கிடெக்சர் (Architecture) (B.Arch)

5. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் (Automobile Engineering)

6. பயோ இன்ஜினியரிங் (Bio Engineering)

7. பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்(Bio Medical Engineering)

8. பயோ டெக்னாலஜி (Bio Technology)

9. பயோ இன்பர்மேட்டிக்ஸ் (Bio Informatics)

10.பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் (Bio Medical Instrumentation Engineering)

11. செராமிக் டெக்னாலஜி (Ceramic Technology)

12. கெமிக்கல் இன்ஜினியரிங் (Chemical Engineering)

13. கெமிக்கல் டெக்னாலஜி (சிமெண்ட் டெக்னாலஜி) (Chemical Engineering) (Cement Technology)

14. கெமிக்கல் டெக்னாலஜி (பெர்ட்டிலைசர் அன்ட் கெமிக்கல் டெக்னாலஜி (Chemical Technology)

(Fertilizer and Chemical Technology)

15. பேப்பர் அன்ட் பல்ப் டெக்னாலஜி (Paper and Technology)

16. சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering)

17. கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் (Computer Science and Engineering)

18.கம்ப்யூட்டர் சாப்ட்வேர் அன்ட் ஹார்டுவேர் (Computer Software and Hardware)

19. எலக்ட்ரிக்கல் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electrical and Electronics Engineering)

20. எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electronic Engineering)

21.எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics and Communication Engineering)

22. எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங்(Electronics and Instrumentation

Engineering)

23. என்விரோன்மென்ட்டல் இன்ஜினியரிங் (Environmental Engineering)

24. பேஷன் டெக்னாலஜி (Fashion Technology)

25.புட் பிராசசிங் அன்ட பிரசர்வேஷன் டெக்னாலஜி (Food Processing and Preservation Technology)

26. புட் டெக்னாலஜி (Food Technology)

27. ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் (Geo Informatics)

28. இண்டஸ்டிரியல் & பயோ டெக்னாலஜி (Industrial Bio Technology)

29. இண்டஸ்டிரியல் இன்ஜினியரிங் (Industrial Engineering)

30. இன்பர்மேஷன் டெக்னாலஜி (Information Technology)

31. இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் (Information Technology and Management)

32. இன்ஸ்ட்ரூமென்டேஷன் அன்ட் கண்ட்ரோல் இன்ஜினியரிங் (Instrumentation and Control Engineering)

33. இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் (Instrumentation Engineering)

34. லெதர் டெக்னாலஜி (Leather Technology)

35. மேனுபேக்சரிங் இன்ஜினியரிங் (Manufacturing Engineering)

36. மரைன் இன்ஜினியரிங் (Marine Engineering)

37. மெட்டிரியல்ஸ் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் (Materials Science and Engineering)

38. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Mechanical Engineering)

39. மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics)

40. மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் (Medical Electronics)

41. மெட்டலர்ஜிகல் டெக்னாலஜி (Metallurgical Technology)

42. மைனிங் இன்ஜினியரிங் (Mining Engineering)

43. பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி (Petro Chemical Technology)

44. புரொடக்ஷன் இன்ஜினியரிங் (Production Engineering)

45. பார்மாசூட்டிகல் இன்ஜினியரிங் (Pharmaceutical Engineering)

46. பிரிண்டிங் டெக்னாலஜி (Printing Technology)

47. ரப்பர் டெக்னாலஜி (Rubber Technology)

48. டெக்ஸ்டைல் டெக்னாலஜி (Textile Technology)

49. மெஷின் லேர்னிங் (Machine Learning)

50. பயோ இன்ஜினியரிங் (Bio-Engineering)

51. மிலிட்டரி இன்ஜினியரிங் (Military Engineering)

52. ஜெனிட்டிக் இன்ஜினியரிங் (Genetic Engineering)

53.அக்ரிகல்சரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி (Agricultural Information Technology)

54. இன்பிராஸ்டரச்சுரல் இன்ஜினியரிங் (Infrastructural Engineering)

55. மோட்டார் இன்ஜினியரிங் (Motorsport Engineering)

56. நேவல் ஆர்க்கிடெக்சர் (Naval Architecture)

57. பாலிமர் இன்ஜினியரிங் (Polymer Engineering)

58. ஜியோ டெக்னிக்கல் இன்ஜினியரிங் (Geo Technical Engineering)

59. நியூக்ளியர் இன்ஜினியரிங் (Nuclear Engineering)

60. ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் அன்ட் டேட்டா சயின்ஸ் (Artificial Intelligence and Data Science)

மேலே குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவுகள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட விவரங்களைத் தெரிந்துகொள்வதற்கு நிச்சயம் உதவும்.

பிளஸ் 2 முடித்தபின்பு மேற்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் கண்டிப்பாக சில சான்றிதழ்களை பெற்று அதனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக -

1.10 ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) சான்றிதழ்

2.11 ஆம் வகுப்பு (பிளஸ் 1) சான்றிதழ்

3.12 ஆம் வகுப்பு (பிளஸ் 2) சான்றிதழ்

4.ஆதார் கார்டு

5.வருமான சான்றிதழ்

6.டி.சி. எனப்படும் மாற்றுச்சான்றிதழ்

7.விளையாட்டுகளில் பெற்ற சான்றிதழ்

8.சாதிச் சான்றிதழ்

9.இருப்பிடச் சான்றிதழ்

10.முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ் (தகுதியுள்ளவர்கள் மட்டும்)

11.மாற்றுத்திறனாளி சான்றிதழ் (தேவையுள்ளவர்கள் மட்டும்)

12.முன்னாள் இராணுவத்தினர் வாரிசுச் சான்றிதழ் (தேவையுள்ளோர்கள் மட்டும்)

13.புகைப்படங்கள்

மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்கள், சான்றிதழ்கள், புகைப்படங்கள் போன்றவை மேற்படிப்பில் சேர விரும்புபவர்களுக்குத் அவசியம் தேவையானவையாகும். எனவே, பொறியியல் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் இவற்றை முன்கூட்டியே பெற்றுக்கொள்வது அவசியம். இந்தச் சான்றிதழ்களில் சிலவற்றை இணையதளம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். www.tnesevai.tn.gov.in என்னும் இணையதள முகவரியைப் பயன்படுத்தி பதிவுசெய்து சுமார் 10 நாட்களுக்குள் சான்றிதழ்களைப் பெறலாம். அரசு அங்கீகரித்த இ-சேவை மையம் மூலமாகவும் விண்ணப்பித்து சான்றிதழ்களைப் பெறலாம்.


Next Story
  • chat