17-ந்தேதி மீலாது நபி விழா - தலைமை காஜி அறிவிப்பு


17-ந்தேதி மீலாது நபி விழா - தலைமை காஜி அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Sept 2024 8:24 AM IST (Updated: 5 Sept 2024 8:34 AM IST)
t-max-icont-min-icon

17-ந்தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

சென்னை,

இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை, மீலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இஸ்லாமிய மாதமான ரபியுல் அவ்வல் மாத பிறை நேற்று தென்படவில்லை.

இந்த நிலையில், ரபியுல் அவ்வல் மாதம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கும். இதனால், நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாது நபி விழா, வருகிற 17-ந்தேதி (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முகம்மது சலாகுதீன் அய்யூப் அறிவித்துள்ளார்.

1 More update

Next Story