மதுரை மாநகராட்சி வரிமுறைகேட்டில் மேலும் 2 பேர் கைது


மதுரை மாநகராட்சி வரிமுறைகேட்டில் மேலும் 2 பேர் கைது
x

மதுரை மாநகராட்சி வரிமுறைகேட்டில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரை வரி விதிப்பு முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக மத்திய குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மேயர் கணவர், மாநகராட்சி உதவி கமிஷனர்கள், பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் உள்பட 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய பலர் பணியிடை நீக்கமும், தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கமும் செய்யப்பட்டனர். ஆனாலும் கைது செய்யப்பட்டவர்கள் பலர் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அதில் பலர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்கள்.

மேலும், போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக கட்டிட உரிமையாளர்கள், உதவி கமிஷனர், மாநகராட்சி பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என பலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் வரி முறைகேட்டில் ஈடுபட்டதாக பழனிகுமார், ஜெயபிரியா என்ற 2 ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். வழக்கில் இதுவரை மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story