மாமல்லபுரம் கடற்கரையில் 200 கிலோ பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு


மாமல்லபுரம் கடற்கரையில் 200 கிலோ பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு
x

120 கிலோ உலர் பழங்களை நிரப்பி, அதில் ஒயின், விஸ்கி, பிராந்தி உட்பட 70 லிட்டர் மது வகைகளை சேர்த்து கேக் தயாரித்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்ட்ம் மாமல்லபுரம் கடற்கரையில் இயங்கி வரும் நட்சத்திர ஓட்டலில், வித்தியாசமான முறையில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்பட்டது. கேக் தயாரிக்கும் பணியில் சமையல் கலைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோர் ஈடுபட்டனர்.

இதற்காக ஒரு படகில் 120 கிலோ உலர் பழங்களை நிரப்பி, அதில் ஒயின், விஸ்கி, பிராந்தி உட்பட 70 லிட்டர் மது வகைகளை சேர்த்தனர். பின்னர் தேவையான அளவு மாவு, இனிப்பு ஆகியவற்றை சேர்ந்த சுமார் 200 கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக்கை தயாரித்து உற்சாகமடைந்தனர். மேலும் அங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தயாரிக்கப்படவுள்ள பல்வேறு கேக் வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story