22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்


22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
தினத்தந்தி 22 Dec 2024 9:54 AM IST (Updated: 23 Dec 2024 8:51 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 22 Dec 2024 8:44 PM IST

    ரஷிய படைகளின் தாக்குதலை உக்ரைனின் விமான படை முறியடித்து உள்ளது. ஷாகித் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷிய வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.

    இதில், 103 ஆளில்லா விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன. அவற்றில், 52 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டோம் என உக்ரைன் தெரிவித்து உள்ளது.

  • 22 Dec 2024 8:29 PM IST

    கன்னியாகுமரியில் களியக்காவிளை சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. திருவனந்தபுரம் மற்றும் தென்காசியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • 22 Dec 2024 8:16 PM IST

    குடியரசு தின அணிவகுப்பு; தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு

    குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை. அலங்கார ஊர்தி அணிவகுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.

    குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. குஜராத், கர்நாடகா, கோவா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் உள்பட 15 மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

  • 22 Dec 2024 8:12 PM IST

    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 22 Dec 2024 6:47 PM IST

    நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பினர் இன்று வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் கும்பலாக திரண்டு வந்து, பூந்தொட்டிகளை தூக்கி போட்டு உடைத்தும், கற்களை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த தெலுங்கானா போலீசார், அல்லு அர்ஜுன் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

  • 22 Dec 2024 6:24 PM IST

    இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. முதலில் டி20 தொடரும், அதற்கடுத்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன. அதன்படி முதல் டி20 போட்டி ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளுக்கும் ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியே எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாடும் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

    சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் அணி:- ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி சுமித், லியாம் லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், ஜோ ரூட், சாகிப் மக்மூத், பில் சால்ட், மார்க் உட்

    டி20 அணி:- ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி சுமித், லியாம் லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், சாகிப் மக்மூத், பில் சால்ட், மார்க் வுட்

1 More update

Next Story