25-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 Dec 2024 10:07 AM IST
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 25 Dec 2024 9:44 AM IST
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள சதைவ் அடல் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, அமித்ஷா, குமாரசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- 25 Dec 2024 9:03 AM IST
விமானப்படை தாக்குதல்: 15 பேர் பலி
பாகிஸ்தானில் இருந்து வான்வழியே ஆப்கானிஸ்தான் மீது ஜெட் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் 15 பேர் பலியாகினர். ஏழு கிராமங்களில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுகளை வீசியதாக, தலிபான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- 25 Dec 2024 8:52 AM IST
ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டத்தில் 150 அடி ஆழ்துளைக் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை 3-வது நாளாக மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்பு படையினர், மற்றும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சுருள் கம்பி முறை உள்ளிட்ட பல்வேறு நுட்பங்களை முயற்சி செய்தும் சிறுமியை மீட்க முடியவில்லை என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். சிறுமிக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்படும் நிலையில் கேமரா உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- 25 Dec 2024 8:52 AM IST
வாஜ்பாய் பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் - எல்.முருகன்
வாஜ்பாயின் நூற்றாண்டு நாளில் அவரது பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம். வாழ்நாளின் பெரும்பான்மை காலத்தை அரசியல் மூலம் மக்களுக்கு சேவை புரிவதில் அர்ப்பணித்தவர். ராணுவ வல்லரசுகளுக்கு சிறிதும் குறைவில்லாத நாடு நமது பாரதம் என்பதை உணர்த்தினார் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
- 25 Dec 2024 8:52 AM IST
அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் ஆகியவை நிலைத்து நீடித்திருக்கட்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
- 25 Dec 2024 8:51 AM IST
அகழாய்வில் உருண்டை வடிவ மணி கண்டெடுப்பு
விருதுநகர் வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழாய்வில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் பீங்கானால் செய்த உருண்டை வடிவ மணி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 2,850க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.









