கோவில்பட்டியில் திருமணமான 2 மாதங்களில் வாலிபர் தற்கொலை


கோவில்பட்டியில் திருமணமான 2 மாதங்களில் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 28 Jun 2025 12:53 AM IST (Updated: 28 Jun 2025 12:55 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி.நகர் 5வது தெருவை சேர்ந்த சண்முகநாதன் மகன் கண்ணன் (வயது 28). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கண்ணன் திருமணத்திற்கு பின்பு வேலைக்குச் செல்லாமல் இருந்தாராம், இதனால் தம்பதியிடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கண்ணன் சம்பவத்தன்று வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

1 More update

Next Story