தூத்துக்குடியில் இருந்து டெல்லி, மும்பைக்கு விரைவில் விமான போக்குவரத்து

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து பெரிய விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் ஜே.ஆர்.அனூப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 4 விமான சேவையும், பெங்களூருக்கு ஒரு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் உள்ள விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தில் இரவுநேர சேவைக்கு தயாராக உள்ளோம். இந்த விமான நிலையத்தில் இருந்து பெரிய விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக 180 பேருக்கும் மேற்பட்ட பயணிகள் செல்லக்கூடிய ‘ஏ321’ ரக விமானங்களை இயக்குவதற்காக இண்டிகோ விமான நிறுவனத்தினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதனால் விரைவில் பெரிய விமானங்கள் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வரும். அதனை தொடர்ந்து டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






