கீழடிக்கு உலகளாவிய குரலை கொடுத்தது பாஜக - தமிழிசை சவுந்தரராஜன்


கீழடிக்கு உலகளாவிய குரலை கொடுத்தது பாஜக -  தமிழிசை சவுந்தரராஜன்
x

மோடி ஆட்சிக் காலத்தில் தான் கீழடி தேசிய கவனத்தைப் பெற்றதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை,

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"தமிழக முதல்வர் நமது தமிழ் சகோதர சகோதரிகளை உணர்ச்சிவசப்பட்டு தவறாக வழிநடத்துகிறார். உண்மை என்னவென்றால்,

மோடி ஆட்சிக் காலத்தில் தான் கீழடி முழு தேசிய கவனத்தைப் பெற்றது. கீழடிக்கு உலகளாவிய குரலை கொடுத்தது. பாஜக உண்மையான வேலை செய்கிறது. பனை ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்குவது முதல் சங்க கால ஆய்வுகளைத் தொடங்குவது வரை.. பாஜக தமிழ் பாரம்பரியத்தை கண்ணியத்துடன் பாதுகாக்கிறது.. "தமிழை அதன் ஒளிரும் கிரீடமாகக்" கொண்டு இந்திய நாகரிகத்தின் ஒற்றுமையை நாங்கள் நம்புகிறோம்.

தேசிய நிகழ்வுகளில் மோடிஜி தமிழில் பேசினார்.. நம் தாய் தமிழுக்கு இவ்வளவு உலகளாவிய குரலை வேறு எந்த பிரதமரும் கொடுத்ததில்லை. மதுரையில் சங்க கால அருங்காட்சியகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். கீழடி நமது தமிழின் பெருமை மற்றும் நாட்டின் பெருமை. அதை தேசிய அளவிலான புகழுக்கு அதை எடுத்துச் சென்றது பாஜக அரசுதான்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story