குற்றால அருவியில் 4 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி


குற்றால அருவியில் 4 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி
x

தண்ணீர் வரத்து அதிகரித்ததால் கடந்த 24ம் தேதி முதல் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகள் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 24ம் தேதி முதல் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அருவியில் நீர்வரத்து சீரானதால் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான மக்கள் அருவி, ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தனர். புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளில் ஏற்கெனவே குளிக்க அனுமதி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story