தூத்துக்குடியில் வாலிபர் கொடூர கொலை: 6 பேர் கைது


தூத்துக்குடியில் வாலிபர் கொடூர கொலை: 6 பேர் கைது
x

தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள உப்பளத்தில் வைத்து மதுபானம் அருந்தியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி சத்யாநகரை சேர்ந்த கண்ணன் மகன் சீனு (வயது 23). இவர் தனது நண்பர்களான தூத்துக்குடி செல்சினி காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முகேஷ்(20), ஜார்ஜ் ரோட்டைச் சேர்ந்த ஜவகர் மகன் ஆகாஷ்(20) உள்ளிட்ட 6 பேருடன் கடந்த 24-ம் தேதி இரவு நடந்த கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர்கள் அனைவரும் மறுநாள் அதிகாலை 3 மணியளவில் சத்யாநகர் உப்பளத்தில் வைத்து மதுபானம் அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முகேஷ் உட்பட 6 பேரும் சேர்ந்து சீனுவை சரமாரியாக அரிவாளால் தாக்கி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முகேஷ், ஆகாஷ் மற்றும் 4 இளஞ்சிறார்கள் என 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story