இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 26-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Dec 2025 11:05 AM IST
பாக்சிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து அபார பந்துவீச்சு.. 152 ரன்னில் சுருண்ட ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆஸ்திரேலியா 45.2 ஓவர்களில் 152 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகிறது. அந்த அணி, 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
- 26 Dec 2025 10:38 AM IST
புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை;
தங்கம், வெள்ளி விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,890-க்கும் பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திகரித்து ஒரு கிராம் ரூ.254-க்கும், கிலோவுக்கு ரூ.9,000-ம் அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,54,000-க்கும் விற்பனையாகிறது.
- 26 Dec 2025 9:34 AM IST
தென் மாவட்ட ரெயில்கள் புறப்படும் நேரம் 1-ந்தேதி முதல் மாற்றம்
புத்தாண்டு முதல், தென் மாவட்டங்களில் இருந்து எழும்பூர் செல்லும் நெல்லை, பொதிகை மற்றும் முத்துநகர் ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட உள்ளது
- 26 Dec 2025 9:10 AM IST
சுனாமி பேரலை தாக்கியதன் 21ம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி
சுனாமி தாக்குதலின் 21-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த துயர நாளில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர கிராம மக்கள், பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கடலில் பால் ஊற்றியும் பூக்களைத் தூவியும் கடல் பேரலைகள் காவு கொண்ட உறவுகளுக்காக நினைவிடங்களில் மீனவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.









