எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு - தென்காசியில் பரபரப்பு

தடயவியல் நிபுணர்கள் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தில் இருந்து எலும்புகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-நெல்லை சாலை அருகே சின்னக்கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் ஒரு ஆண் சடலம் முற்றிலும் எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் நெல்லையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தில் இருந்து எலும்புகளை சேகரித்து சம்பவ இடத்திலேயே ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. அரவிந்த் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






